Monday, February 22, 2016

 27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது :
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு) மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான் புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு) பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான் அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான் திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு) அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு) சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன் அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Read more at:
 http://tamil.oneindia.com/astrology/news/2012/nakshatra-gods-27-aid0176.html













பரிகார பைரவர் - ருரு பைரவர் + மாஹேஸ்வரி - சுக்கிரன்
பரிகார முறை:
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திய பின்பு தான் பரிகார முறைகளை செய்ய வேண்டும். அனைத்து விலங்குகளின் கறி மற்றும் முட்டை மற்றும் மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட இனிப்புகளும் அசைவம் ஆகும். மைதா மாவில் முட்டையில் வெண்கரு சேர்க்கப்படுவதாலும் மேலும் கரும்பு சர்க்கரையில் எலும்புச் சாம்பல் சேர்க்கப்படுவதாலும் இவையிரண்டும் அசைவ பொருட்களே ஆகும்.
அசைவத்தினை நிறுத்தாமல் பைரவ வழிபாடு செய்தால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.  முழுமையான பலன் கிடைக்காது.  நாய் வந்து கடிக்கும். பைரவரே அசைவத்தினை நிறுத்த வைப்பார். தண்டித்து திருத்துவார்.
அருகிலுள்ள சிவத்தலத்தில் உள்ள பைரவர் சந்நிதிக்கு பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் வரும் நாளில் சுக்கிர ஓரையில் அல்லது வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வழிபாடு செய்ய வேண்டும்.
ஒரு வாழையிலையில் மொச்சைக்காய் பரப்பி அதன் மேல் 6 புது மண் அகல்கள் வைத்து ஒவ்வொன்றிலும் 6 மொச்சைக்காய்கள் போட்டு 5 எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்ற வேண்டும். வெள்ளை நிற துணியில் 27 மிளகுகள் வைத்து முடிச்சு போட்டு திரியாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு 6 திரிகள் செய்து ஒவ்வொரு அகலிலும் வைத்து மொத்தம் 6 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
அவரவர் வீட்டில் மொச்சைக்காய் சுண்டல் செய்து படையலாக வைக்க வேண்டும்.
பைரவர் பெருமானுக்கு அல்லிப்பூவினை சாற்றி அவரவர் பிறந்த கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயரில் மற்றும் குலதெய்வத்தின் பெயர் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சகருக்கு காணிக்கையாக தங்களில் வயதுக்குரிய எண்ணிக்கையின் பணத்தினை தர வேண்டும். அதாவது 33 வயது எனில் 33 ரூபாய்கள் தர வேண்டும்.
பின்பு கீழ்க்காணும் மந்திரங்களை 6 ன் மடங்குகளில் (6, 15, 24, 33, 42, …) செபம் செய்ய வேண்டும்.

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்

ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

மந்திர செபம் செய்த பின்பு வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் இல்லங்களுக்கோ செல்லாமல் அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
இந்த பரிகார முறை 9 தடவைகள் செய்யப்பட வேண்டும். அதாவது 9 வெள்ளிக்கிழமைகளோ அல்லது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வரும் நாளில் 9 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் நல்ல பலன் கிட்டும்.
வழிபாடு செய்யும் நாட்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.
பரிகாரத்தின் பலன்:-
பிறந்த ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் குறைந்தவர்கள், சுக்கிர திசை நடப்பவர்கள் மற்றும் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும்.  இதன் மூலம் சுக்கிரனால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். தோஷங்கள் விலகும். பீடைகள் விலகும். நினைத்தவை நடக்கும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். சுகபோகங்கள் உண்டாகும்.  கலைகளில் தேர்ச்சியும் வெற்றியும் உண்டாகும்.  திருவருள் உண்டாகும்.  காதலில் வெற்றி உண்டாகும்.  கலைத்துறையில் வெற்றியும் புகழும் உண்டாகும்.
குறிப்பு:-
இந்த பரிகார வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது.  இது வழிபடுபவர்களின் ஜாதக தோஷங்களை முழுமையாக போக்கக்கூடியது. அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்தாதவர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் முறையற்ற உறவு உள்ளவர்கள் மேற்கண்ட பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டாம். மீறி செய்தால் பைரவ தண்டனை உண்டு. மேற்கண்ட ஒழுங்கீனங்களை நிறுத்தினால் மட்டுமே முழுமையான பலன் உண்டு மற்றும் பரிகார வழிபாடு வெகு விரைவில் பலனளிக்கும்.

27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்





27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்



உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்




ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்




விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்












ஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு மந்திரம்  
27  நட்சத்திரத்திற்கும்    ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம்கொடுக்கப்பட்டுள்ளது..இது ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட சக்தி வாய்ந்தமந்திரமாகும்..கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும் 
.
சகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்
 
1. 
அஸ்வினி
   
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய 
  
தாமலேச தூதலோக பந்தவே நமசிவாய
   நாம சோஷிதா நமத் பவாந்தவே நமசிவாய
  பாமரேதர ப்ரதாத பாந்தவே நமசிவாய
 
2. 
பரணி
 
 
கால பீதவிப்ரபால பாலதே நமசிவாய 
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நமசிவாய
பாலயாதுனா தயாலவாலதே நமசிவாய

3. கிருத்திகை
 
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நமசிவாய 
துஷ்டதைத்யவம்சதூமகேதவே நமசிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நமசிவாய 
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நமசிவாய
 
4. 
ரோஹிணி
 
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நமசிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நமசிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நமசிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நமசிவாய
 
5. 
மிருகசிரீடம்
 
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நமசிவாய 
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நமசிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நமசிவாய 
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நமசிவாய
 
6. 
திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நமசிவாய 
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நமசிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நமசிவாய 
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நமசிவாய



 
7. 
புனர்பூசம்
 
காமநாசனாய சுத்த கர்மணே நமசிவாய 
ஸாம கான ஜாயமான சர்மணேநமசிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நமசிவாய 
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நமசிவாய
 
8. 
பூசம்
 
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நமசிவாய 
சின்மயை கரூப தேஹ தாரிணே நமசிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நமசிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நமசிவாய
 
 9. 
ஆயில்யம்
 
யக்ஷராஜ பந்தவே தயாளவே நமசிவாய 
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நமசிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நமசிவாய 
அக்ஷி பால வேத பூத தாளவே நமசிவாய
 
10. 
மகம்
 
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நமசிவாய 
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நமசிவாய 
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நமசிவாய
 
11. 
பூரம்
 
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நமசிவாய 
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நமசிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நமசிவாய 
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நமசிவாய





 
12. 
உத்திரம்
 
தீனமான வாளி காம தேனவே நமசிவாய 
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நமசிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நமசிவாய 
தானவாந்தகார சண்ட பானவே நமசிவாய
 
13. 
ஹஸ்தம்
 
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நமசிவாய 
ஸர்வ தேவதா கணாத் சாயினே நமசிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நமசிவாய 
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நமசிவாய
 
14. 
சித்திரை
 
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நமசிவாய 
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நமசிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நமசிவாய 
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நமசிவாய
 
15. 
ஸ்வாதி
 
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நமசிவாய 
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நமசிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நமசிவாய 
சர்வரீச தாரிணே கபாலினே நமசிவாய
 
16. 
விசாகம்
 
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நமசிவாய 
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நமசிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நமசிவாய 
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நமசிவாய



 
17. 
அனுஷம்
 
மங்களப் ரதாயகோ துரங்கதே நமசிவாய 
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நமசிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நமசிவாய 
அங்கஜாரயே கரே குரங்கதே நமசிவாய
 
18. 
கேட்டை
 
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நமசிவாய 
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நமசிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நமசிவாய 
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நமசிவாய
 
19. 
மூலம்
 
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நமசிவாய 
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நமசிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நமசிவாய 
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நமசிவாய
 
20. 
பூராடம்
 
அந்ரி பாணயே சிவம் கராயதே நமசிவாய 
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நமசிவாய
  பங்க பீஷிதா பயங்கராயதே நமசிவாய 
பங்க ஜாஸனாய சங்கராயதே நமசிவாய
 
21. 
உத்திராடம்
 
கர்மபாச நாச நீலகண்டதே நமசிவாய 
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நமசிவாய
  நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நமசிவாய 
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நமசிவாய



 
22. 
திருவோணம்
 
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நமசிவாய  
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நமசிவாய
 இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நமசிவாய 
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நமசிவாய
 
23. 
அவிட்டம்
 
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நமசிவாய 
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நமசிவாய
  ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நமசிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நமசிவாய
 
24. 
சதயம்
 
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நமசிவாய 
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நமசிவாய
 பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நமசிவாய
 தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநமசிவாய
 
25. 
பூரட்டாதி
 
 
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நமசிவாய 
 
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நமசிவாய
  பக்த ஸங்கடாபஹர யோகினே நமசிவாய 
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நமசிவாய
 
26. 
உத்தரட்டாதி
 
 
அந்த காந்த காய பாப ஹாரிணே நமசிவாய 
 
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நமசிவாய
  ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நமசிவாய 
 
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நமசிவாய



 
27. 
ரேவதி
 
சூலினே நமோ நம: 
கபாலினே நமசிவாய 
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நமசிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நமசிவாய 
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நமசிவாய
ஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்? blood pressure

            ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்?
உயர் ரத்த அழுத்த நோய், குறைந்த ரத்த அழுத்த நோய் (பிளட் பிரஷர்) உள்ளவர்கள் அதற்கான வைத்தியங்களைச் செய்து கொள்ள வேண்டும்.  மேலும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு மஞ்சள் துணி அணிவித்து, கொண்டக்கடலையை நிவேதனம் செய்து, மஞ்சள் பூ கொண்டு அவரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.  'ஓம் குருவே நமஹ' என 108 தடவை கூறி குரு பகவானை 9 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.  இந்தப் பரிகார வழிபாட்டை மூன்று வியாழக்கிழமை செய்ய வேண்டும். பின் நிவேதனம் செய்து கொண்டக்கடலையை அர்ச்சகருக்கு தானமாய் கொடுத்துவிட வேண்டும்.  இவ்வாறு செய்தால் பிளட்பிரஷர் குணமாவதைக் காணலாம
நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா? தொடர்ந்து படியுங்கள்..  
மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.




ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது









சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும். 






துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.







தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.





மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்.

Read more:
 http://www.livingextra.com/2010/12/12.html#ixzz40p3BTDiA
மேஷ ராசி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்


ரிஷப ராசி :
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம் 
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

மிதுன ராசி : 
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு 
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான் 

கடக ராசி :
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி ) 
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் ,திருபரங்குன்றம்

சிம்ம ராசி :  
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி 
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன் 

கன்னி ராசி :
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 


துலாம் ராசி :
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர் 


விருச்சிக ராசி  : 
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர் 
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை 
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி

தனுசு ராசி : 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

மகர ராசி :  
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்

கும்ப ராசி : 
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

மீன ராசி : 
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்

Read more: 
http://www.livingextra.com/2010/12/12-27.html#ixzz40p3JDT00

கடன் தீர பரிகாரம்

கடன் தீர பரிகாரம்

1, கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அஸ்வினி, அல்லது அனுஷம்நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும்.

2, செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும்.

3, ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும்குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

4, மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது, ( ஜென்ம நட்சத்திரம் முதல் 8-வது வரும் நட்சத்திரம் மைத்திர நட்சத்திரமாகும் ) இது ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு வரும்.

5, அதாவது அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில்விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒருசிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும்.

6, குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம்,

7, கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம்,

8, மரணயோகம் உள்ள நாட்களிள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப்பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன்ஏற்படாது.

6,
 தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லைநீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதியே வர வரத சர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா
ஹிருயாதி ந்யாஸ நிக்விமோக

என்ற இந்த மந்திரத்தை தினசரி 108 முறை நம்பிக்கையுடன் மனத்துள் ஜெபித்து வந்தால் ருண தோஷம்நீங்கும்.

ஜாதகப்படி என்ன கல்வி அமையும்

நம் ஜாதக அமைப்பில் எந்த கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன என்பதைக் கொண்டு, நமக்கு எந்த உயர்கல்வி அமையும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.  

சூரியன்: நிர்வாக படிப்புகள், எம்பிஏ, தத்துவ பாடங்கள்

சந்திரன்: மருத்துவம், கெமிக்கல், தண்ணீர், கப்பல் சார்ந்த படிப்புகள்

செவ்வாய்: அறுவை சிகிச்சை, விவசாய படிப்பு, சிவில் இன்ஜினியரிங்  

புதன்: கணக்கு, வங்கி, ஆடிட்டர், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்

குரு: இலக்கியம், வானியல், சட்டம், ஆசிரியர்

சுக்கிரன்: சினிமா, கலைதுறை, பேன்சி ஸ்டோர், வங்கி, பணம் சம்பந்தபட்ட தொழில்

சனி: வரலாறு, கனிமங்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

ராகு: சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம், டெக்னிக்கல் துறை  

கேது: மருத்துவம், சாத்திர படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள்

உயர் கல்வியும் கிரக அமைப்புளும்

உயர் கல்வியும் கிரக அமைப்புகளும் வித்யாகாரகன் புதன், இரண்டாம் அதிபதி பலம் பெற்றால் இடையூறின்றி பட்டம் பெற முடியும். 

சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன்-குரு இருப்பது வித்யா கஜகேசரி யோகம். இந்த அமைப்பு பெரிய அந்தஸ்தை கொடுக்கும். 


மேஷ ராசியில் சூரியன்-புதன் சேர்க்கை பெற்றால் சாஸ்திரமேதை, தத்துவஞானி, மொழி ஆராய்ச்சியாளராகப் பரிமளிக்கலாம். 

பத்தாம் வீட்டுடன் புதன் தொடர்பு கொண்டால், எழுத்தாளர், கவிஞர், நிருபர், செய்தி ஆசிரியர் ஆகலாம். 

சூரியன் வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருந்தால் அறிவியல், இசை துறையில் நாட்டம் ஏற்படும். 

குரு பார்த்தால் சங்கீத ஞானம் உண்டாகும். லக்னம், நான்கு, ஏழு, பத்து ஆகிய இடங்களில் சூரியன், சந்திரன் சேர்க்கை மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகளில் பிறந்திருந்தால் சிறந்த எழுத்தாளர், பேராசிரியர், விரிவுரையாளர் ஆகலாம்.

கல்வியின் தடை ஏற்பட காரணம்

அரியர்ஸ், ஃபெயில் - என்ன காரணம்

கல்வி பயிலும் காலத்தில் தடைகள் வருவதற்கு கிரக தசாபுக்திகளும் கோச்சார நிலைகளுமே காரணம். 

நீச்ச கிரக தசைகள் 6, 8, 12ம் கிரக தசைகள் காரணமாக தடைகள், தோல்வி ஏற்படும். 

புதன் நீச்சமாகி அல்லது பலம் குறைந்து தசை வந்தால் படிப்பில் நாட்டம் குறையும் மறதி உண்டாகும், குழப்பங்கள், மன சஞ்சலம் ஏற்படும். 

தேர்வின் போது, 6, 8, 12ம் அதிபதியுடன் நான்காம் அதிபதி சனி, செவ்வாய் சேர்க்கை காரணமாக எதிர்பாராத விபத்து மற்றும் ஆரோக்கிய குறைவு காரணமாக தடைகள் வரும். 

படிக்கும்போது லக்னம், ஐந்து, ஏழு, எட்டாம் இடங்களில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் சம்பந்தம் காரணமாக காதல் எண்ணங்கள், சபலபுத்தி மனதை அலை பாய வைத்து தடையை ஏற்படுத்தும். 

படிக்கும்போது சுக்கிரன், லக்னாதிபதி, செவ்வாய் சேர்க்கை பெற்ற தசை வந்தால் கூடாத நட்பும், தேவையற்ற விஷயங்களில் நாட்டமும் உடல்நலக் கோளாறுகளும் தடையை ஏற்படுத்தும். 

கோச்சார கிரக நிலைகளான ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, நான்கில் சனி, லக்னத்தில் ராகு-கேது போன்ற கிரக சுழற்சி மாற்றங்களால் மறதி, அசதி, சோம்பல், ஏமாற்றம் போன்றவை உண்டா கும். 

இதனால் கல்வி தடைபடும். அந்தந்த கிரக பலம், பார்வை பலம், சேர்க்கை பலம், புதன் பலம், தசாபுக்தி போன்றவற்றிற்கு உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் தோல்விகளை தவிர்க்கலாம். தோல்விக்கு காரணமும் கிரகங்களே  

கல்வியில் தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புக்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. 

நீச்ச கிரக திசாபுக்திகளும், 6, 8, 12 ஆகிய கிரக திசை புக்திகளும், பலம் குறைந்த நீச்ச கிரக சேர்க்கை பெற்ற ராகு-கேது திசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். 

புதன் நீச்சமாகியோ, 6, 8, 12ல் மறைந்தோ திசை வந்தால் கல்வியில் தடை ஏற்படுகிறது. படிப்பில் நாட்டம் செல்லாமல் தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் உண்டாகும். 

படிக்கும் காலத்தில் 6, 8, 12 ஆகிய கிரக திசைகள் வந்தால் மறதி அதிகரிக்கும். 

எட்டாம் அதிபதி நான்காம் அதிபதியுடனும், சனி, செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று திசை வந்தால் திடீர் தடைகள் ஏற்படலாம். 

லக்னம், 5, 7, 8-ம் இடங்களில் சந்திரன் - சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் திசாபுக்திகளால் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும். 

சுக ஸ்தானாதிபதியாகிய நான்காம் அதிபதியுடன் நீச்ச கிரக சேர்க்கை பெற்ற திசாபுக்திகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வி தடை ஏற்படலாம். 

சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை, நீச்ச கிரக திசாபுக்திகள், ராகு-கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன்ற ஸ்தானங்களில் வருவது

சனிப்பெயர்ச்சி காரணமாக 4ல் சனி, ஏழரை சனி, அஷ்டமச்சனி நடப்பது ஆகியவையும் கல்விக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. 

இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, மேலும் அதிக சிரமப்பட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். 

வழிபாடு, பரிகாரங்கள் செங்கல்பட்டு அருகில் உள்ள செட்டிபுண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவ தலங்கள். இங்கு சென்று வழிபட்டால் கல்வித் தடைகள் நீங்கும். 

புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். திருக்கடையூர் அபிராமி அம்மனை தரிசித்து பிரார்த்திக்கலாம். 

தினமும் காலையில் விநாயகர் அகவல் படித்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். ஞானத்தையும், பல்வேறு கலை, கல்விகளில் தேர்ச்சியையும், அறிவாற்றலையும் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று வணங்கலாம். 

திருவொற்றியூரில் ஞான சக்தியாக அருளும் வடிவுடையம்மனை பவுர்ணமி அன்று தரிசித்து வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும்.

Sunday, 21 December 2014

கால தாமதமாக விவாகம் நடைபெறுவதற்கான அம்சங்கள்

கால தாமதமாக விவாகம் நடைபெறுவதற்கான அம்சங்கள்

   1, ஏழாம் பாவகாதிபதி 3,6,8,12ல் அமர்வது
     
        21,2,7,8 பாவகங்களும் அதிபதிகளும் வலிமைக்குறைவோடு இருப்பது.

   3, ஏழாம் பாவகாதிபதி பகை, நீச, அஸ்தமனம் மற்றும் கிரகயுத்தத்தில் தோற்பது.
  
   4, ஏழாம் பாவகாதிபதி வலிமைக்குறைந்து திரிகோணாதிபதிகளின் தொடர்பில்லாமல் இருப்பது.
  
   5, சனி, இராகு, கேது போன்ற கிரகங்களால் 1,2,7,8 போன்ற பாவகங்கள் பாதிப்படைவது.
  
   6, ஏழாம் பாவகாதிபதிகளின் நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையற்று இருப்பது.

7, ஆண், பெண் ஜாதகத்தில் மேற்கூறிய இரண்டுநிலைகளின் படி 1,2,7,8, ஆகிய பாவகங்களை ஆய்வு செய்துவிவாகம் தகுந்த வயதில் நடைபெறுமா அல்லது காலம் தாழ்த்தி நடைபெறுமா என்பதை சரியாக கணிதம் செய்யவேண்டும்.



ஜாதகமும் காதல் திருமணமும்

ஜாதகமும் காதல் திருமணமும்

1, காதல் திருமணம் என்பது பையன் மற்றும் பெண் இவர்கள் செய்துகொள்ளும் arranged marriage ஆகும். இதுசாஸ்திர சம்பிரதாயங்களை புறக்கணித்து, வழக்கங்களுக்கு மாறான செயலாகும்.

2, ஜாதகத்தில் 5 ஆம் வீடு சம்பிரதாயங்கள் மற்றும் பழக்க வழக்கங்க்களை குறிக்கும்.

3, மேலும் மத சம்பிரதாயங்களை 9 ஆம் வீடு குறிக்கும்.

4, 7 ஆம் வீடு வாழ்க்கை துணைவரைக் குறிக்கும்.

5, இவ்வாறு சம்பிரதாயங்களை புறக்கணித்து காதல் மணம் புரிவோர் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில்வலிமையான கிரகங்களோ அவ்வீட்டின் ஆட்சி கிரகமோ இடம் பெறும்.

 6, காதல் உணர்வுகளை தூண்டி மணம் செய்ய வைப்பதில் வலிய கிரகம் சனி ஆகும். அதற்கு அடுத்தவலிமையான கிரகம் ராகு.

7, ஆணின் ஜாதகத்தில் சனி அல்லது ராகு இவர்களின் பார்வை/சேர்க்கை மூலம் சுக்கிரன்பாதிக்கப்பட்டிருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம்.

8, ஆகவே 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் அவ்வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் காதல்திருமணத்தை நிர்ணயிக்கின்றன.

9, 5,7 மற்றும் 9 ஆம் அதிபதிகள் conjunction/trine/sextile முறையில் 5,7,9,10 அல்லது 11 ஆம் வீடுகளில் அமையும்.

10, காதல் திருமணத்திற்கு எளிய சூத்திரம். 5ஆம் அதிபன் + 7 ஆம் அதிபன் அல்லது 7 ஆம் அதிபன்+ 9ஆம்அதிபன் அல்லது 5 ஆம் அதிபன்+9ஆம் அதிபன்.

11, ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் செய்யும் பணியை பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் செய்கிறது.அதாவது சனி அல்லது ராகு செவ்வாயுடன் சேர்ந்தாலோ செவ்வாயை பார்த்தாலோ காதல் தொடர்புகளைஏற்படுத்தும். முடிவில் திருமணம் நடப்பது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், சனி, ராகு, சந்திரன் இவர்களின்அமைப்பை பொறுத்தது.
வெற்றிகரமான காதல் திருமணத்திற்கு சில கிரக இணைவுகள்:
1, ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் 12ஆம் வீட்டிலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 12ஆம் வீட்டிலும்.
2,  9-ஆம் வீட்டில் அசுப கிரகம்
3, ஆண் மற்றும் பெண்னின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்கள் வீடுகளைபரிவர்த்தனை செய்திருந்தால் காதல் திருமணம் வெற்றிகரமாக இருக்கும்.




1 comment:

  1. First casino slot game for kookoo.kr - Kookoo
    The only first casino slot game for bk8 kookoo.kr, the first casino 퍼스트 카지노 to play with 메리트 카지노 고객센터 money. Play for real prizes with no deposits!

    ReplyDelete